Tuesday, 21 March 2017

Vodafone India and Idea Cellular announce Combined. what an idea with Vodafone.!!!

Tuesday, 21 Mar, 1.41 am

வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைப்பு! நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கம்


பிரிட்டனைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் ஆகியவை இணைவதாக திங்கள்கிழமை அறிவித்தன..
இணைப்பு நடவடிக்கையை அடுத்து உருவாகும் நிறுவனத்துக்கு குமாரமங்கலம் பிர்லா தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்ய பிர்லா நிறுவன குழுத்துக்கு ரூ.3,874 கோடி மதிப்பிலான 4.9 சதவீத பங்குகளை மாற்றிய பிறகு புதிய நிறுவனத்தில் வோடஃபோன் நிறுவனத்தின் பங்கு மூலதனம் 45.1 சதவீதமாக இருக்கும். ஐடியா நிறுவனம் 26 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும். எஞ்சிய பங்கு மூலதனம் இதர பங்குதாரர்கள் வசம் இருக்கும்.
வோடஃபோன்-ஐடியா இணைப்பால் உருவாகும் புதிய நிறுவனத்தை வோடஃபோன் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமம் இணைந்து நிர்வகிக்கும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி வோடஃபோன் நிறுவனம் 20.46 கோடி வாடிக்கையாளர்களுடன் 18.16 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஐடியா நிறுவனம் 19.05 கோடி வாடிக்கையாளர்களுடன் 16.9 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
வோடஃபோன்-ஐடியா இணைப்பால் வருவாயைப் பொருத்தமட்டில் 43 சதவீதம் அதிகரித்து ரூ.80,000 கோடியாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பொருத்த அளவில் 40 சதவீதம் அதிகரித்து சுமார் 40 கோடியாகவும் இருக்கும்.
வோடஃபோன்-ஐடியா இணைப்பைத் தொடர்ந்து, சந்தைப் பங்களிப்பு, வாடிக்கையாளர் எண்ணிக்கை அளவில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும்.
தற்போது, ஏர்டெல் நிறுவனம் 26.58 கோடி வாடிக்கையாளர்களுடன் 23.58 சதவீத சந்தைப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment